BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Breaking News
Home / திருக்கோவில்

திருக்கோவில்

கொங்கு வேளாளர்களில் காடைகுலம், உரிமையுடன் காணிக் குலதெய்வக் கோயிலாக குடிபாட்டுக் கோயிலாக விளங்கும் பெருமையுடையது சோழியம்மன் திருக்கோயில். இழ்னைச் சோளியம்மன் என்றும் தொன்று தொட்டு அழைத்து வருகின்றனர்.
கரூர் வட்டாரத்திற்கும் சோழர்கட்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கொங்குப் பகுதிக்குத் தம் தொடர்பால்
வீர சோழமண்டலம்
அதிராச ராச மண்டலம்
வீரகெரள சோழமண்லம்
என்று பெயர் வைத்தனர். கரூருக்கு முடிகொண்ட சோழபுரம், முடி வழங்கு சோழபுரம் என்ற என்று பெயர் வைத்தனர். பல சோழர் கல்வெட்டுக்கள் கரூரிலும் சுற்றுவட்டாரத்திலும் உண்டு.
விக்கிரம சோழச் சதுர்வேத மங்கலம், சோழசமுத்திரம், அழகிய சோழக் கூத்த நல்லூர், விசயகண்டசோழபுரம், ஆதித்த மங்கலம், சோழனூர், சோழன் துறை, சோழபுரம் முதலிய ஊர்கள் சோழர் தொடர்பை விளக்கும்.
அரையன் ராசராசனான வீரராசேந்திர செயமுரிநாடாழ்வான், உத்தமசோழன் ஆன ராஜராஜ பிரமாதிராயர், இராசாராசன் ஆன தொண்டைமான் போன்ற அரசு அலுவலர்கள் சோழரால் சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் என்பதைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம்.
சோழியப்பன், சோழசெட்டி, சோழவேள், சோழவாண்டி, சோழத்தச்சன் எனப் பல சமூகத்தரும் பெயர்கள் வைத்துக் கொண்டுள்ளனர். இவற்றின் மூலம் கரூர்ப் பகுதிக் கொங்கு நாட்டுக்கும் சோழர் பரம்பரைக்கும் உள்ள தொடர்பு வெளிப்படுகிறது.
கரூர் அருகேயுள்ள வெள்ளியணையில் கி.பி.6 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சோழர் தலைவன் ஒருவன் ஒரு குளம் வெட்டி வைத்துள்ளான்.
அகணிதன் குளம்,
என்ற கல்வெட்டு அக்குளத்தின் கரையில் உள்ளது. தஞ்சைச் சோழர்கள் முத்தரையர் காலத்தில் கரூர்ப் பகுதியில் தங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்ற இழ்ன் மூலம் அறிகின்றோம்.
அதனாலேயே காடைகுலம், விலையகுலம், குருகுலத்தூர் காணியுரிமையுடைய கோயில், சோழியம்மன், எனப்பெயர் பெற்றது போலும். ஆத்தூர்க் கிராமத்தில் சோழியம்மன் கோயில் உள்ள இடத்திற்கு நத்தமேடு என்று பெயர். சோழீசுவர் என்ற பெயரும் நோக்கத்தக்கது.
கோயிலுக்கு முன்னர் ஓங்கி உயர்ந்த தீபத்தம்பமும் அதனையொட்டிய மண்டபமும் உள்ளது. தீபத் தம்பத்தில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும். அழகிய முன் மண்டபம், வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அகன்ற இடத்துடன் புதுப்பொலிவோடு விளங்கும் கோயிலைக் காணலாம்.
நுழை வாயிலின் இடப்புறம் தெற்கு நோக்கி, வீரசாம்புவன், சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வீரசாம்புவன் பொன்னர், சங்கர் ஆகியோரின் மெய்க்காப்பாளனாகவும், கால்நடைகளின் தலைவனகாவும், ஆலோசனை கூறும் மதி மந்திரியாகவும் விளங்கியவன். கொங்கு வேளாளர் குலத்தெய்வன் கோயில்களில் வீரசாம்புவன் திருவுருவங்கள் காளையின் மீது அமர்ந்திருப்பது போலவும், திடுமம் என்ற வாத்தியம் கொட்டுவது போலவும் அமைப்பது வழக்கம். வீர சாம்புவன் வழிபாடு கொங்கு நாட்டு மக்களின் நன்றியுணர்ச்சிக்கு எடுத்துக்காட்டான வழிபாடாகும்.
வீரசாம்புவன் சன்னதியின் கீழ்புறம் கல் மண்டபம் சிறப்புற விளங்குகிறது. பிரகாசரத்தின் வடகிழக்கு மூலையில் கம்பீரமாக இரண்டு குதிரைகள் மேற்கு நோக்கி நிற்கின்றன. அருகே வடபுறம் கல் குதிரையொன்று மிக அழகிய வேலைப்பாட்டுடன் திகழுகிறது. அதற்குத் தனிச் சன்னதி அமைத்து வேல் குத்துவதற்கும் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. கல் குதிரையின் எதிரே தூரி அமைக்கப்பட்டுள்ளது. அருகே பழமையான வேல் உள்ளது.
கிழக்குப் பிரகாரத்தில், பட்டவன் கோயில், உள்ளது. மேற்குப் பிரகாரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கன்னிமூலைக் கணபதி கோயிலுக்கு வடபுறம், வாக்கார அப்பிச்சி, கோயில் சிறப்புடன் விளங்குகிறது.
பட்டவன் கோயிலும், வாக்கர அப்பிச்சி கோயிலும் இக்கோயில் கணியாளர்களின் முன்னோர்கள் ஆகும். பட்டவன், சமூகத்தை அல்லது கோயிலைக் காக்கும் முயற்சியிலேயோ அல்லது ஊர்காக்கும் உத்தமப் பணியிலேயோ வீர மரணம் எய்திய பெருவீரராக இருக்கலாம். வாக்கார அப்பிச்சி மிகச் சிறப்புடன் வாழ்ச்த குல முதல்வராக இருக்கலாம்.
ஆடு, மாடு முதலிய கால்நடைகட்கு நோய் ஏற்பட்டால் கோயிலில் வழிபாடு செய்து வாக்கார அப்பிச்சிக்கு வெண்ணெய் பூசி வேண்டிக் கொண்டால் கால்நடைகள் நோய் நீக்கம் பெறுகின்றன. வாக்கார அப்பிச்சியின் கரங்களில் வாளும் கேடயமும் உள்ளது தளபதி என்று இவரைக் கூறுகின்றனர்.
சிம்மம், பலிபீடத்தைக் கடந்து சோழியம்மன் கோயிலின் உள் சென்றால் முதலில் 22 தூண்களுடன் கூடிய அழகிய விசாலமான முன் மண்டபம் காணப்படுகிறது. தூண்களில் குழலூதும் கண்ணன், கருடன், தண்டபாணி முதலிய தெய்வீகச் சிற்பங்கள் உள்ளன.
மகா மண்டபத்தில் துவாரசக்திகளில் உள்ளன. நான்கு கால்கள் உடைய மண்டபம் காற்றோட்டமாக எடுத்துக் கட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அர்த்த மண்பத்தைக் கடந்து உள் சென்றால் வேண்டியோர்க்கு வேண்டி வரங்களைக் தந்து காத்திடும் கண்கண்ட தாய்த் தெய்வமாகச் சோழியம்மனைக் கண்டு வணங்கிப் பேறு பெறலாம்.
அம்மன் தீமைகளை அழிக்கும் சக்தியாக துஷ்ட நிக்கிரக சிஷ்ட்ட பரிபாலனம் செய்யும் எழில் வடிவத்தில் ஏற்றமுடன் காட்சியளிப்பதைக் காணலாம்.
தெய்வீக சக்தியுடன் கூடிய எட்டுக் கைகளோடு அம்மன் விளங்குகிறார். வலப்பக்கம் உள்ள நான்கு திருக்கரங்களில் முத்தலைச் சூலமும், கத்தி, குழந்தை உடுக்கை ஆகியன திகழ்கின்றன இடப்பக்கம் உள்ள நான்கு திருக்கரங்களில் நாகம், கேடயம், மணி, எல்லைச் சட்டி ஆகியன உள்ளன.
சோழியம்மனுக்குப் பழமையும் புதுமையும் ஆன இரண்டு உற்சவ மூர்த்தங்கள் உள்ளது. இப்போது வழிபாட்டில் உள்ள மூர்த்தத்தில், ஆத்தூரு சோளியம்மன் என எழுதப்பட்டுள்ளது. மூல அம்மன் போலவே உற்சவ மூர்த்தத்திற்கும் எட்டுத் திருக்கரங்கள் உள்ளன.
சோழியம்மன் கோயிலுக்கு முன் கிழக்குப் பார்த்த சன்னதியாக முத்துசாமி கோயில் உள்ளது. முத்துச்சாமி சோழியம்மன் கோயிலின் காவல் தெய்வமாகும். வாளும், தண்டும் அவர் ஆயுதங்களாக உள்ளன.
மக்கள் வேண்டுதலுக்காகச் செய்து அளிக்கப்பட்ட உருவாரச் சிற்பங்கள் பல கோயிலில் உள்ளன.
அம்மன் ஆலயத்தைச் சிற்பசாத்திர முறைப்படி நன்கு அமைத்துள்ளனர். கன்னிமூலை கணபதி, முத்துசாமி, வாக்கார அப்பிச்சி, பட்டவன், வீரசாம்புவன் ஆலயங்கள் புதிய முறையில் மிகச் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. சாலகாரம், சமையல் கூடம் வசதியாகவே அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் உள் தள வரிசை சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆலயங்களுக்கும், முகப்புச் சிற்பங்களுக்கும் கண்ணைக் கவரும் வர்ண வேலைகள் அழகிய முறையில் பூசப்பட்டுள்ளன. ஆலயம் தொழுவது சாலவும் நன்று, என்பது பழமொழி, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் முன்னோர் கூறுவர். கோயில் விளங்கக் குடிவிளங்கும், என்பர்.
பண்டைய ஊரமைப்பு நூல்களான üüமயமதம்ýý போன்ற நூல்களில் ஒரு ஊரில் எந்தெந்தக் கோயில்கள் எங்கெங்கு அமைய வேண்டுத் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வகையில் நமது ஆத்தூரிலும் பல கோயில்கள் உள்ளன. அவை பெரும்பாலும் நல்ல திருப்பணிகளைப் பெற்று மக்களால் வழிபடப் பெற்றுச் சிறப்புடன் விளங்குகின்றன.

சோழிசுவரர் கோயில் :-
நத்த மேட்டின் கீழ்புறம் தொன்மையாக இருந்த சிவன் கோயில் புதிய திருப்பணியுடன் விளங்குகிறது. பழமைச் சுவடுகளோ கல்வெட்டோ எதுவும் இல்லை. கோயில் பழமை பற்றிக் கேட்டால் மீன் சின்னம் உள்ளதெனக் கூறுகின்றனர். இங்குள்ள மீன் சின்னங்கள் சிற்பிகள் செதுக்கிய வளமைச் சின்னங்கள் பாண்டியர் சின்னங்கள் போலக் காணப்படவில்லை.
கொங்குநாட்டின் வழக்கமாகக் காணப்படும் கோயிலுக்கு வெளியேயுள்ள தீபத் தம்பம் இல்லை. ராஜகோபுர அமைப்பு எதுவும் இல்லை. உள்ளே கொடிக்கம்பம் மட்டும் உள்ளது. பலிபீடம் நந்தி உள்ளது.
சிவபெருமான் சோழீசுவர் ; அம்மன் புவனேசுவரி என்பதாகும். செல்வவிநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய தெய்வங்களுக்குப் பரிவாரச் சன்னதிகள் உள்ளன.
ராஜகோபுரம் கட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதாக அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.
பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. வேலுக்குப் பதிலாக ஈட்டி முருகப் பெருமானுக்கு ஆயுதமாக விளங்குகிறது. இவ்வூரின் காவல் தெய்வதாக முருகன் விளங்கிறார் என்று கூறிகிறார்கள்.
நாகர் உருவங்கள் உள்ளன. நாக வழிபாடு திராவிடர்களின் தொன்மையான வழிபாடு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மாதந்தோறும் இரண்டு பிரதோஷ காலங்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை, மகாசிவராத்திரி, சஷ்டி, கிருத்திகை, ஏகாதசி, மாத சதுர்த்தி போன்ற விழாக்களும் சிறப்புப் பூசைகளும் நடைபெறுகின்றன. பங்குனி உத்தரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. தை மாதப்பிறப்பு – பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
கோயில் பிரகாரங்களில் நந்தவனம் உள்ளது. கோயில் தல விருட்சமாக வில்வமரம் விளங்குகிறது. கோயிலுக்கு வெளியே விநாயகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வேம்பு – அரசு வைக்கப்பட்டுள்ளது. அருகில் நெல்லி மரம் வைக்கப்பட்டுள்ளது.
வழிபடுவோருக்கு முன் எச்சரிக்கையாக நற்பலன்களைக் காட்டி இறைவன் அருள்பாலித்து வருகிறார். கோயிலுக்கு மானிய பூமிகள் உள்ளன. பரம்பரை சிவச்சாரியார்கள் வழிபாடு ஆற்றி வருகின்றனர்.